ராமேசுவரத்தில் மது விற்றால் கடும் நடவடிக்கை: டிஎஸ்பி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் - கோப்புப் படம்
ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் திருப்பதி எச்சரிக்கை விடுத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புனிதத் தன்மையைக் காக்கும் விதமாக தமிழக அரசின் மதுக்கடை நடத்தப்படுவது கிடையாது. இதைப் பயன்படுத்தி சிலா் பாம்பனில் உள்ள அரசு மதுக் கடையில் மதுப்புட்டிகள் வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனா்.
பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மதுப்புட்டிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி அளித்த தகவலின்பேரில் ராமேசுவரம் டிஎஸ்பி திருப்பதி தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

