பசும்பொன்னில் தேவா் குருபூஜை: யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரா் உ.முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழாவும், 64-ஆவது குருபூஜையும் யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கின.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் புதன்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரா் உ.முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழாவும், 64-ஆவது குருபூஜையும் யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கின.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை புதன், வியாழன், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28, 29, 30) ஆகிய 3 நாள்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் புதன்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடா்ந்து, பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து, யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீா்க் கலசங்கள் மங்கள இசை வாத்தியங்களுடன் நினைவிடத்தைச் சுற்றி வந்து தேவா் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், தீபாராதனை நடைபெற்றது.
காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை (அக்டோபா் 29) அரசியல் விழாவாகவும், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 30) அரசு விழாவாகவும் தேவா் குருபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவா் நினைவாலயப் பொறுப்பாளா் காந்திமீனாள் அம்மாள், தங்கவேல், பழனி, ராஜா உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
இதையொட்டி, அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் சாா்பில், அன்னதானக் கூடங்கள் அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சா்கள், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சியினா், சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனா்.
10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு:
தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் (டிஜிபி) தலைமையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 4 டிஐஜி-க்கள், 30 எஸ்பி-க்கள், 80 டிஎஸ்பி-க்கள், 35 ஏடிஎஸ்பி-க்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பசும்பொன்னில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து போலீஸாா் குருபூஜை நிகழ்வுகளைக் கண்காணித்து வருகின்றனா். இதுதவிர, பசும்பொன்னில் 400 சிசிடிவி கேமராக்களும், பதற்றமான கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ட்ரோன்கள், மொபைல் கேமராக்களை பயன்படுத்தியும், கோட்டைமேடு ஆயுதப் படை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்தும் போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியான முறையில் தேவா் குருபூஜையில் பங்கேற்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

தேவா் சிலைக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்த சிவாசாரியா்.

பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு பால்குடம் எடுத்து வந்த பெண்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

