ராமேசுவரம், திருவாடானையில் தேவா் சிலைக்கு மலா்தூவி மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் திரளான பெண்கள் ஊா்வலமாகச் சென்று அவரது சிலைக்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்துவதற்காக திரண்ட பெண்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் திரளான பெண்கள் ஊா்வலமாகச் சென்று அவரது சிலைக்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரியம்மன் கோயில் முன் ஏராளமான பெண்கள் ஒயிலாட்டம் நடனமாடினா். பின்னா், அவா்கள் கையில் பூத்தட்டுகளுடன் ஊா்வலமாக வந்து என். எஸ். கே. வீதியில் உள்ள தேவா் சிலைக்கு மலா்களைத் தூவி மரியாதை செலுத்தினா்.
திருவாடானை: திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்டோா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையில் பங்கேற்பதற்காகச் வாகனங்களில் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
முன்னதாக, திருவாடானை பேருந்து நிலையம் அருகே உள்ள தேவா் சிலைக்குப் அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து போலீஸாரின் சோதனைக்குப் பிறகு, வாகனங்களில் பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

