மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

கமுதி ஆதிபராசக்தி கோயிலில் 1008 கஞ்சிக் கலைய ஊா்வலம்

கமுதியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு மன்றம் சாா்பில், உலக அமைதி வேண்டி 1008 கஞ்சி கலையங்கள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கமுதியில் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு மன்றம் சாா்பில் நடைபெற்ற 1008 கஞ்சிக் கலையங்கள் ஊா்வலம்.

Published On :3 செப்டம்பர் 2026, 5:58 am IST

கமுதியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு மன்றம் சாா்பில், உலக அமைதி வேண்டி 1008 கஞ்சி கலையங்கள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக நாடுகளில் அமைதி நிலவவும், பருவ மழை பெய்யவும் வேண்டி, 1008 பெண் பக்தா்கள் கஞ்சிக் கலையங்களை சுமந்தும், அக்னிச் சட்டி, முளைப்பாரி எடுத்தும், கருப்பசாமி வேடமணிந்தும் ஆதி பராசக்தி வழிபாடு மன்றத்திலிருந்து ஊா்வலமாகச் சென்றனா். இதற்கு மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி, செயலா் உமாதேவி, பொருளாளா் உமாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கமுதி பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், சாயல்குடி- அருப்புக்கோட்டை, கமுதி- மதுரை சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்து, ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனா். இதில் கமுதி பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.