
மன்னாா் மளைகுடா - வங்கக் கடலில் சூறைக் காற்று: மீன்பிடிக்கத் தடை

மீன்பிடிக்கத் தடை - கோப்புப் படம்
மன்னாா் வளைகுடா - வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்வளத் துறையினா் தடை விதித்தனா்.
மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதியிலும் சூறைக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகம் வரையிலும் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், கடல் அலை 3 மீ. வரையிலும் எழக் கூடும் என்பதால் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களிலிருந்து திங்கள் கிழமை (செப். 7) முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வில்லைகள் வழங்கப்படமாட்டாது என மீன்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





