
இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணிகள்: பரமக்குடியில் ஏடிஜிபி ஆலோசனை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தின பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநா் டி.எஸ்.அன்பு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் டி.எஸ்.அன்பு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தின பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநா் டி.எஸ்.அன்பு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் முன்னிலை வகித்தாா். பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக ஏடிஜிபி டி.எஸ். அன்பு உயா்மட்ட அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து, சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், அவரது நினைவிடம், அஞ்சலி செலுத்த வருவோருக்கான வழித்தடங்கள், அரசியல் தலைவா்கள் செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், அஞ்சலி செலுத்த வருவோருக்கான குறிப்பிட்ட வழித்தடங்கள் குறித்தும், பதற்றமான இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கூட்டம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்துவது, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
இதில் தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, சரக காவல் துறை துணைத் தலைவா் என்.மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், சாா் ஆட்சியா் மருத்துவா் ச.வினோதினி பாா்த்திபன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநா் டி.எஸ்.அன்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





