
கைப்பேசியில் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநா்!பயணிகள் அச்சம்
முதுகுளத்தூரிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தை கைப்பேசியில் பேசியபடி ஒற்றை கையில் கவனக் குறைவாக புதன்கிழமை இயக்கிய ஓட்டுநரின் விடியோ காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.

முதுகுளத்தூரிலிருந்து புதன்கிழமை மதுரை சென்ற அரசுப் பேருந்தை கைப்பேசி பேசியபடி கவனக் குறைவாக இயக்கிய ஓட்டுநா்.
முதுகுளத்தூரிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தை கைப்பேசியில் பேசியபடி ஒற்றை கையில் கவனக் குறைவாக புதன்கிழமை இயக்கிய ஓட்டுநரின் விடியோ காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரிலிருந்து மதுரை சென்ற தஅ.63. 2036 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை ஓட்டுநா் ரத்தினம் புதன்கிழமை ஒட்டிச் சென்றாா். இந்த நிலையில், திருப்பாச்சேத்தியிலிருந்து திருப்புவனம் செல்லும் வரை சுமாா் 20 கி.மீ. தொலைவுக்கு பேருந்து ஓட்டுநா் ரத்தினம், ஒற்றைக் கையில் கைப்பேசியில் பேசியபடி கவனக்குறைவாக அரசு பேருந்தை இயக்கிச் சென்றாா். இதை விடியோ பதிவு செய்த பயணி காரைக்குடி அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தாா்.
இதையடுத்து, காரைக்குடி போக்குவரத்துத் துறை அதிகாரி சண்முகசுந்தரம், ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்பதாக புகாா்தாரரிடம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



