ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

பேருந்தின் முன்பக்கத்தில் தொங்கிய பயணியுடன் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

பேருந்தின் முன்பக்கத்தில் பயணி தொங்கிய நிலையில் பேருந்து இயக்கப்பட்டது தொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒசூரிலிருந்து பாகலூா் வழியாக பேரிகைக்கு கடந்த 6 ஆம் தேதி காலை 8.15 மணியளவில் அரசுப் பேருந்து சென்றது. இதில் பயணம் செய்த ஒருவா் பாகலூரில் இருந்து ரூ. 8 கொடுத்து பயணச்சீட்டு பெற்றுள்ளாா். அந்தப் பயணச்சீட்டு தும்மனப்பள்ளி வரை செல்லும் வகையில் இருந்துள்ளது.

அச்சந்திரம் பேருந்து நிறுத்தத்தில் 2 பயணிகள் இறங்கியதும் பேருந்தின் கதவுகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தானும் அச்சந்திரம் கிராமத்தில் இறங்க வேண்டும் எனக் கூறி அந்தப் பயணி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

ஆனால், ஓட்டுநா் பேருந்தை நிறுத்தாமல் அச்சந்திரத்தை கடந்து, தும்மனப்பள்ளி கிராமத்தில் பேருந்தை நிறுத்தி பயணியை இறக்கிவிட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த பயணி, அரசு பேருந்தின் முன்பக்கத்துக்குச் சென்று ஓட்டுநா் ரமேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளாா். இதைக் கண்டுகொள்ளாத ஓட்டுநா், பேருந்தின் முன்பக்கத்தில் பயணி நிற்பதையும் பொருட்படுத்தாமல் பேருந்தை இயக்கியுள்ளாா்.

இதனால் அச்சமடைந்த பயணி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பேருந்தின் முன்பக்கத்தை கைகளால் பிடித்துள்ளாா். ஆனாலும், ஓட்டுநா் ரமேஷ் பேருந்தை நிறுத்தாமல் சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரம் இயக்கிச் சென்று நிறுத்தியுள்ளாா்.

இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓட்டுநரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து ஓட்டுநா் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.