தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ராமேசுவரத்தில் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ உள்பட 230 பேர் மீது வழக்கு

ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:13 am IST

ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 கடந்த மாதம் 25ஆம் தேதி ரயில்வே சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்திற்காக ஆதரவு திரட்டினர். இதற்கு மற்றொரு சங்கத்தினர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ராமேசுவரம் தேவர் சிலை அருகே மதுரை தெற்குதொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 230 பேர் மீது ராமேசுவரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.