ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்தது குறித்து...

News image

அன்பில் மகேஸ் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:21 pm IST

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார். ஆனால், கோடை வெய்யிலின் தாக்கம் குறையாத நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.

இதனைக் கருத்தில்கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:

மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் போது, கோடை வெய்யிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெய்யிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Former School Education Minister Anbil Mahesh stated on Tuesday that the date for reopening schools in Tamil Nadu should be postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.