மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது பற்றி...

school reopen

கோப்புப்படம் - ANI

Published On :

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யில் காரணமாக தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் அந்த தேதியை உறுதி செய்திருந்தது. மேலும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

ஆனால், கோடை வெய்யிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஒரு வார காலம் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை வீசக் கூடுமா? வெய்யிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பாக முதல்வர் ஜோசப் சி. விஜய் தலைமையில் அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

வானிலை மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Will School Reopening Be Postponed?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.