திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விநாயகர் சிலைகளை அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை(செப்.17) முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை அனுப்புவதற்காக, இந்து முன்னணி சார்பில் கடந்த ஒரு மாதமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தென்மாபட்டு பகுதியில் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள இச்சிலைகள் சிவகங்கை, மானாமதுரை, கல்லல், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ளன. சிலை தயாரிப்பு குறித்து நாகசுந்தரம் கூறியது: சிலைகள் தயாரிக்கும் பணியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்தபதி ஞானவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

