டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

திருப்புவனத்தில் மகளிர் குழு போராட்டம் வாபஸ்

திருப்புவனத்தில் மகளிர் குழுவினர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த போராட்டம், சமாதான பேச்சுவார்த்தை மூலம் வாபஸ் பெறப்பட்டது.

Published On :

திருப்புவனத்தில் மகளிர் குழுவினர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த போராட்டம், சமாதான பேச்சுவார்த்தை மூலம் வாபஸ் பெறப்பட்டது.

திருப்புவனம் நகரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலி குடம் ஏந்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தாலுகா அலுவலக கூட்டரங்கத்தில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், திருப்புவனம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு)சாகுல்ஹமீது, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்தில், பேரூராட்சியில் 16, 17 ஆகிய வார்டுகளின் மின்இணைப்பு நகர் மின் இணைப்புடன் இணைக்கப்படும். பழையூர் ஊரணி தூர்வாரி பாதுகாக்கப்படும்.

அனைத்து நகர் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடக்க இருந்த போராட்டத்தை கைவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.