நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

தேவகோட்டையில் தீ விபத்தில் 36 குடிசைகள் நாசம்

தேவகோட்டை அருகே குடிசை வீடுகள் மர்மமான முறையில் எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :

தேவகோட்டை அருகே குடிசை வீடுகள் மர்மமான முறையில் எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேவகோட்டை இறகுசேரி பகுதியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களில் கடை நடத்தி வருகின்றனர். ஏர்வாடி  திருவிழாவில் கடை வைப்பதற்காக அனைவரும் சென்றுவிட்ட நிலையில் அவர்களது குடிசைகளில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்து தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் 36 வீடுகள் முற்றிலும் எறிந்து நாசமாயின. இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. 

சம்பவ இடத்தை தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம், வட்டாட்சியர் கருணாகரன், காவல் துணைக்கண்காணிப்பாளர் கருப்பசாமி, ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.  

 தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார், வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். விபத்துகான காரணம் குறித்து தேவகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.