சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மானாமதுரையில் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம்: பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

மானாமதுரை நகரில் செவ்வாய்க்கிழமை முதல் ஒருநாள் விட்டு  ஒருநாள் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :

மானாமதுரை நகரில் செவ்வாய்க்கிழமை முதல் ஒருநாள் விட்டு  ஒருநாள் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

   மானாமதுரை நகர் குடிநீர் திட்டம், ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது.

  இங்கிருந்து குழாய்களில் கொண்டு வரப்படும் குடிநீர் நகரில் பல இடங்களிலுள்ள மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்ட பின் குழாய் இணைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மானாமதுரை பகுதியில் கடும் வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் திட்டத்தில் நீராதாரம் வெகு வேகமாக குறைந்து தேவைக்கு ஏற்ப குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.    இதனால் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மானாமதுரை நகர் பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும்  ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

   அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.