சிவகங்கையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை-தொண்டி சாலையில் அரசு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, கடந்த 22 ஆம் தேதி இரவு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து வங்கித் தரப்பில், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (19) என்பவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

