மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடியில்  வார்டுகள் மறுவரையறை  பட்டியல் வெளீயீடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.
  உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் உள்ளாட்சி எல்லைகளின் வார்டுகளை மறுவரையறை செய்தபின் தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறையின்படி கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாமல் சராசரி மக்கள்தொகையை கணக்கில் கொண்டு மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சிகளில் வார்டு எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. 
 இந்த வரைமுறையின்படி ஒவ்வொரு வார்டுகளிலும் கூடுதல் தெருக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வார்டில் இருந்த தெருக்கள் வேறு வார்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வார்டுகளின் எண்களும் மாறியுள்ளன. மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இந்த வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜான்முகமது, திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அழகர்சாமி வார்டு மறுவரையறை பட்டியலை வெளியிட்டனர். மேலும் பொதுமக்கள் பார்வைக்கு அலுவலகங்களில் தகவல் பலகையில் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியங்களிலும் வார்டு மறுவரையறை உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆட்சேபம் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com