வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மானாமதுரையில் ஐயப்பன் பவனி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஐயப்ப சுவாமி பவனி நடைபெற்றது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:45 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஐயப்ப சுவாமி பவனி நடைபெற்றது. 
  மானாமதுரை அண்ணாசிலை அருகே தெற்குரத வீதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்து அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். புதன், சனிக்கிழமைகளில் ஐயப்ப பக்தர்கள் கூடி பஜனை நடத்தி அன்னதானம் செய்து வருகின்றனர்.  இந் நிலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, அதில் ஐயப்பன் உருவப்படத்தை வைத்து மேளதாளம் முழங்க மானாமதுரை நகர் முழுவதும் பவனி நடைபெற்றது.   முன்னதாக மலர் அலங்காரத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் ஐயப்பன் தேரோடும் வீதிகளில் வலம் வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.