/

சரக்கு வாகனம்-கார் மோதல்: பெண் சாவு - 5 பேர் பலத்த காயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதன்கிழமை சரக்கு வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:29 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதன்கிழமை சரக்கு வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
      சிவகங்கை அரசினிப்பட்டியைச் சேர்ந்தவர் கோடிஸ்வரன் மனைவி ரஞ்சனிதேவி(32). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தையை திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பில் உள்ள தனது மாமியாரிடம் காட்டி விட்டு காரில் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது ஏரியூர் விலக்கு சாலை அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த கார் மீது மோதியது.
இதில் காரில் சென்ற ரஞ்சினிதேவி, அவரது 11நாள் குழந்தை, அவரது தாயார் மாரியம்மாள்(58), மற்றும் உறவினர் கண்ணத்தாள்(52), ஆசைத்தங்கம்(60) மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் சுப்பிரமணியன் (46) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதில் குழந்தை மற்றும் ஆசைத்தங்கம் மற்றும் ஓட்டுநர் சுப்பிரமணியன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
பலத்த காயமடைந்த கீழப்பூங்குடியைச்சேர்ந்த கண்ணாத்தாள் மற்றும் மாரியம்மாள், ரஞ்சனிதேவி ஆகியோர் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். வழியில் கண்ணாத்தாள் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.