எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேவகோட்டையில் ரூஸோ நினைவு தினம் அனுசரிப்பு

தேவகோட்டையில் புதன்கிழமை ரூஸோவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:40 pm

DIN

தேவகோட்டையில் புதன்கிழமை ரூஸோவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
 இதையொட்டி திமுக சார்பில் மாவட்ட துணைச் செயலர் மணிமுத்து தலைமையில் தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்து ரூஸோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திமுக நிர்வாகி காசிநாதன், மாவட்ட துணைச் செயலர் ஜோன்ஸ்ரூசோ, காளையார்கோவில் ஒன்றியச் செயலர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் அழகையா, அம்சக்கண்ணன், இளங்கோ, சிவக்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    அதே போல் பார்க்கவ குலம் சங்கம் சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின் ஆரோக்யராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலர் ஜெயசீலன் தலைமையில், மாநில துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.  
    தென்னாட்டு பார்க்கவ குலம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் கிஷோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்று மாலையில் ரூசோ பேரவையின் சார்பில் அதன் தலைவர் அலங்காரம் தலைமையில்,  திமுக மாவட்ட துணைச் செயலர் ஜோன்ஸ் ரூசோ, அவரது மகன் ஆண்டனி நிஷாந்த் ரூசோ, பேரவைச் செயலர் ஆரோக்ய ராஜேஸ்,  பொருளாளர் ஆரோக்யசாமி,  சட்ட ஆலோசகர்  கணேசன், தமிழ் அரிமா, சாந்தாள் அரிமா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.