காளையார்கோவில் பகுதியில் அக்டோபர் 13 மின்தடை

Updated on
1 min read

காளையார்கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மின் பகிர்மானத்தின் கோட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மு.சிவலிங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதன் காரணமாக  அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூர், கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, சருகணி மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில்  மின் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com