ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிவகங்கை மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:28 am

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதில்,அந்தந்த வருவாய் கோட்டத்துக்குட்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா, வருமானச் சான்றிதழ்,பிறப்பு,இறப்புச் சான்றிதழ், சமூக நலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். அவை விசாரனை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கண்டாங்கிபட்டி, காரைக்குடி வட்டம் பெத்தாட்சி குடியிருப்பு, திருப்புவனம் வட்டம் சொட்டதட்டி, தேவகோட்டை வட்டம் புதுகுறிச்சி,  மானாமதுரை வட்டம் மணக்குளம், திருப்பத்தூர் வட்டம் உடையநாதபுரம், இளையான்குடி வட்டம் கச்சாத்தநல்லூர், காளையார்கோவில் வட்டம் உசிலங்குளம், சிங்கம்புணரி வட்டம் உரத்துப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.