தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் வெண்கலப்பதக்கம் வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை புதன்கிழமை பாராட்டினர்.
60 ஆவது மாநில குடியரசு தின தடகளப்போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியம் தனியார் பொறியல் கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியில் கலந்துகொண்ட தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுப்பிரிவில் மாணவர் பிரவீண் குமார் 200மீ ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், இதே பிரிவில் மாணவர்கள் விஷால், சிவக்குமார், சபரிநாதன், பிரவீண்குமார் ஆகியோர் 400மீ தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், 19 வயதுக்குட்ப்பட்டோருக்கான பிரிவில் ரகுநந்தன், அகிலன், பிரகாஷ், சக்திவேல் ஆகியோர் 400 மீ தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த உடற்கல்வி இயக்குநர் பூமிநாதன்,பயிற்சி ஆசிரியர்கள் சேவுகராஜா, சந்திரன் ஆகியோரை பள்ளிச்செயலாளர் ராமநாதன்,தலைமையாசிரியர் வெங்கடாசலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதன்கிழமை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.