தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு சமையலர், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு சமையலர்மற்றும் சமையலர் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள்

Updated On :29 ஜனவரி 2024, 9:47 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு சமையலர்மற்றும் சமையலர் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் 39 சமையலர் மற்றும் 458 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
சமையலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 8-ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1.7.2017 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 21 வயது முதல் 40 வயதுக்கு மிகாமலும், பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயதுக்கு மிகாமலும்,விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
மாவட்டத்தில் காலியாக உள்ள 458 சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் 1.7.2017 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களாக இருந்தால் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ் நகலுடன் விண்ணப்பத்தினை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.