சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இடைக்காட்டூரில் பாஸ்கு விழா ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் வெள்ளி, சனி இரு நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 1:07 am

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் வெள்ளி, சனி இரு நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் 135-வது ஆண்டு பாஸ்கு விழா நடைபெற்றது.  முன்னதாக மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலி பங்கு அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நடந்த  பாஸ்கு விழாவை முன்னிட்டு ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கலையரங்கில் வண்ண மின்விளக்குகளால் கண்ணைக்கவரும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த இவ் விழாவில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். இசைக்கலைஞர்களின் பின்னனி இசை மற்றும் பாடல்களுடன்  நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏசு பிரானின் வாழ்க்கை நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.  ஏசுபிரான் முதல்முதலாக தோன்றும் காட்சியின்போது கலையரங்கத்தின் மீது கண்ணைக்கவரும் வகையில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள் பாஸ்கு விழாவை கண்டு ரசித்தனர். இதற்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து இடைக்காட்டூருக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.