சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா: சிவனடியார்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம்  திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 1:06 am

சிவகங்கை மாவட்டம்  திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். 
திருப்பாச்சேத்தியில்  மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகியநாதர்
சுவாமி கோயில் உள்ளது.  இக்கோயிலில் திருமுற்றோதல் விழாவை முன்னிட்டு பல பகுதிகளிலிருந்தும்  சிவனடியார்கள் கூடினர். 
கடந்த சனிக்கிழமை மாலை பல்வேறு வாத்தியங்கள் முழங்க, மாணிக்கவாசகர் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரித்து ரதத்தில் வைத்து திருப்பாச்சேத்தி வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 
அதைத்தொடர்ந்து கோயிலில் திருமுற்றோதல் பெருவிழா நடந்தது. சிவ தொண்டர் சிவதாமோதரன் இதில் கலந்து கொண்டு சிவபுராணம் குறித்து பேசினார். 
காலை முதல் மாலை வரை நடந்த, இந்நிகழ்ச்சியின்போது சிவனுக்குரிய பல்வேறு வகையான கைலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 
அப்போது சிவ தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இவ்விழாவை முன்னிட்டு 
கோயிலில் மூலவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் கோயிலில் அன்னதானம் நடந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.