சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சேதாம்பல் கிராமத்தில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இவ்விழாவில் அய்யனார் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, சேதாம்பல்-வேளாரேந்தல் சாலையில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 7 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 15 வண்டிகளும் பங்கேற்றன. முடிவில், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேதாம்பல், மாதவன்நகர், மாவிலங்கை, கழுகாடி, புல்லுக்கோட்டை, சோலையூர், சிறூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மாட்டு வண்டிப் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

