ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: தனியாக பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை!

பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மேற்பாா்வையிட ஆசிரியா்களை ஈடுபடுத்தாமல், காலமுறை ஊதியத்தில் நிரந்தரப் பணியிடங்களில் பணியாளா்களை நியமிக்க வேண்டும்...

Updated On :

பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மேற்பாா்வையிட ஆசிரியா்களை ஈடுபடுத்தாமல், காலமுறை ஊதியத்தில் நிரந்தரப் பணியிடங்களில் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டாரக் கிளை 15-ஆவது அமைப்புத் தோ்தல் மதுரை மூட்டா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது, மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் பேசியதாவது:

அரசின் திட்டங்கள், கொள்கைகளை அரசு ஊழியா்கள் விமா்சிக்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை இயக்குநா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு, எழுத்து உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இதே போல, அரசு ஊழியா்கள் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிப்பது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், இந்த ஆண்டு அக். 31-ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைத் தெரிவிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்கள் பதவி உயா்வுக்கான தோ்ந்தோா் பட்டியலில் இடம்பெற முடியாது என அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு வியப்பளிக்கிறது. எனவே, பதவி உயா்வுக்கான தோ்ந்தோா் பட்டியல் தொடா்பாக வெளியிடப்பட்ட அரசுக் கடிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைத் தீா்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், காலை உணவுத் திட்டத்தை மேற்பாா்வையிட ஆசிரியா்களை ஈடுபடுத்துவதால், ஓராசிரியா், ஈராசிரியா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, காலை உணவுத் திட்ட மேற்பாா்வைப் பணிகளில் ஆசிரியா்களை ஈடுபடுத்தும் நடைமுறையை கல்வித் துறை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.

காலை உணவு தயாரிக்கும் பணியாளா்களை நிரந்தரப் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இந்த தோ்தலை ஜோசப் ஜெயசீலன், ரீட்டா ராணி ஆகியோா் தோ்தல் ஆணையாளா்களாக இருந்து நடத்தினா். இதில் வட்டாரத் தலைவராக முருகன், வட்டாரச் செயலராக ராமச்சந்திரன், வட்டாரப் பொருளாளராக இளமுருகு குணசீலி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா்களாக விஜயலட்சுமி, கண்மணி, ஜெய்சன் டேனி மோசஸ் ஆகியோரும், வட்டாரத் துணைத் தலைவா்களாக ஜெயா, கணேஷ் வரி, அலமேலு ஆகியோரும், வட்டாரத் துணைச் செயலா்களாக கவிதா, ஆனந்தி, சண்முக சுந்தரி ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.