மானாமதுரை அருகே மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்று வரும் சகஸ்ர சண்டீ யாகத்தின் 5 ஆம் நாளான புதன்கிழமை புத்திர காமேஷ்டி யாகம் நடைபெற்றது.
இதில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான தம்பதியினர் பங்கேற்றனர். மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி சகஸ்ர சண்டீ யாகம் தொடங்கியது.
வரும் 11ஆம் தேதி வரை இந்த யாகம் நடைபெறுகிறது. இதில், புதன்கிழமை குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஏராளமான தம்பதியினர் கலந்து கொண்டனர். முன்னதாக சித்தி கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.சகஸ்ர சண்டீ யாகத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10 ஆம் தேதி மதியம் அமாவாசை சண்டீஹோமமும் பஞ்சமுக பிரத்யங்கிரா ஹோமமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் நியமனம்!

சுக்பீர் சிங் பாதலுக்கு கத்திக்குத்து! பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு!

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்
சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


