‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

புனித அலங்கார அன்னை தேர் பவனி

சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.
கடந்த ஆக.6 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்கவும் செபமாலை, நவநாள் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியன நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை ஆராதனை, தேர்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட முதன்மைச் செயலர் பாக்கியநாதன் தலைமை வகித்தார்.அதன்பின்னர், புனித அலங்கார அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்பு தொடங்கிய தேர்பவனி,மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை,சத்திய மூர்த்தி தெரு, காந்தி வீதி,அரண்மனை வாசல்,நேரு கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில், அருட்பணி தந்தையர்கள் ஜோ.ஆரோக்கியராஜ்,பிரிட்டோ, பர்மா ஆலயத்தின் பங்கு தந்தை ஜோஜப், சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தின் பங்கு தந்தையர்கள் மரியடெல்லஸ், வல்லபதாஸ், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.