பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு: சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் விநாடிக்கு 3,336 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து,சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:47 am IST

வைகை அணையில் விநாடிக்கு 3,336 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து,சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைகை அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அணையில் இருந்து நொடிக்கு 3,336 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மேலும் கால்நடைகளையும் மேய்ச்சலுக்காக வைகையாற்றில் அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். வைகை அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அதிகமாக வருவதால்  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.