மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சிவகங்கை அருகே துவாங்கால் கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் மகன் சரவணக்குமார் (26). இவர், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரையிலிருந்து துவாங்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார். மானாமதுரை-சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, சிவகங்கையிலிருந்து மானாமதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். மேலும், இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தைல மரக்காட்டில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மானாமதுரை சிப்காட் போலீஸார், சரவணக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த பேருந்து பயணிகளை மீட்டு, சிவகங்கை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







