பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மதுரையிலிருந்து மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

மதுரையிலிருந்து மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பிப். 27 ந் தேதி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.  இவர்கள் மார்ச் 2 ந் தேதி கோயிலை வந்தடைகின்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:59 pm

DIN

மதுரையிலிருந்து மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பிப். 27 ந் தேதி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.  இவர்கள் மார்ச் 2 ந் தேதி கோயிலை வந்தடைகின்றனர்.
 மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து குடும்ப நன்மைக்காக பக்தர்கள் பாதயாத்திரை  மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்தாண்டு பாதயாத்திரை பயணம் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. பிரத்யங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பாதயாத்திரை பயணத்தை தொடங்கும் பக்தர்கள் சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் வழியாக மார்ச் 2 ஆம் தேதி காலை மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வந்தடைகின்றனர். இரவு கோயிலில் மாசி மாத பௌர்ணமி விளக்குப்பூஜை நடைபெறுகிறது.  வழியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானமும் தங்குவதற்கு இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை பயணத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.