திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி காளையப்பா நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ்குமார்(,22) மற்றும் இளங்கோ மகன் தினேஷ்குமார்(18) ஆகியோர் எலெக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சென்றனர். கும்மங்குடிப்பட்டி அருகே செல்கையில் ஊர்குளத்தான்பட்டி விலக்கு சாலையிலிருந்து காரைக்குடி சாலையில் திரும்பிய பொக்லைன் இயந்திரம் மீது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி மகன் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்புறம் அமர்ந்திருந்த மற்றொரு தினேஷ்குமார் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

