மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பி.இ., பி.டெக்., 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: காரைக்குடியில் கலந்தாய்வு நிறைவு

2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

Updated On :9 ஜூலை 2018, 1:32 am

2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்  ஜூன் 30-ஆம் தேதி இந்த கலந்தாய்வு தொடங்கியது. இதற்கு ஆன்லைன் மூலம் 12,021 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 11,164 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 
கலந்தாய்வின் முதல் நாளில், சிறப்பு ஒதுக்கீடான விளையாட்டுப் பிரிவு மாணவர்களில் 20 பேரில் 16 பேரும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 30 பேருக்கு 24 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 31 பேரில் 20 பேரும் பங்கேற்று, தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர். 
அதில் லெதர் டெக்னாலஜி பிரிவில் 2 பேரும், பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் 5 பேரும், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 132 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 75 பேரும் தேர்வு செய்து, சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
ஜூலை 1 மற்றும்  2 ஆம் தேதி நடைபெற்ற சிவில் பாடப்பிரிவு கலந்தாய்வில் 2,150 இடங்களுக்கு 1,847 பேர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 4,800 இடங்களுக்கு 3,964 பேர் பங்கேற்றனர். ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி வரை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 4,123 இடங்களுக்கு 3,390 பேர் பங்கேற்று சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
கணித பட்டதாரிகள் பிரிவில் 12 இடங்ளுக்கு 4 பேர் மட்டுமே கலந்து கொண்டு கல்லூரியைத் தேர்வு செய்து அனுமதிக்கடிதம் பெற்றனர்.
இந்த ஆண்டு மொத்தம் 1,939 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஏ. இளங்கோ தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.