மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

15.4.1976: வள்ளுவர் கோட்டம்: இன்று ராஷ்டிரபதி திறந்து வைக்கிறார்

வள்ளுவர் கோட்டத்தை ராஷ்டிரபதி திறந்து வைக்கவிருப்பது பற்றி...

News image

15.4.1976 - Dinamani

Updated On :14 ஏப்ரல் 2026, 10:30 pm

சென்னை, ஏப். 14 - சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்தை ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகம்மது வியாழக்கிழமையன்று திறந்து வைக்கிறார். வள்ளுவர் கோட்டம் நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இது 6 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் கட்டும் பணியில் 1000 கைவினைஞர்கள் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையளிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ரூ. 75 லட்சம் செலவாயிற்று. ஆசியாவிலேயே இது மிகப் பெரிய கட்டிடம் என்று கருதப்படுகிறது.

போலீஸ் இலாகா காரியதரிசி கே. சுப்பிரமணியமும், பொதுப் பணித்துறை எஞ்சினீயர் சி.வி. பத்மநாபனும் இன்று பத்திரிகையாளர்களை வள்ளுவர் கோட்டத்துக்கு அழைத்துச் சென்று இந்த நினைவு சின்னத்திலுள்ள சீரிய அம்சங்களை விளக்கினர். விசேஷ அதிகாரி பொறுப்பை வகிக்கும் சி. வெங்கடாசலபதி, தகவல்துறை டைரக்டர் என். கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும், கட்டுமான பணியில் ஈடுபட்ட பல எஞ்சினீயர்களும் இருந்தனர். ...

... தமிழ்நாட்டின் தலை சிறந்த ஸ்தபதிகளான கணபதி ஆச்சார், ஜானகிராமன் ஆகியோர் மேற்பார்வையில் சிற்ப வேலைகள் நடந்தன.

15-4-75 அன்று நடைபெறவிருக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா அரங்கத்தில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை குடிநீருக்கு கிருஷ்ணா ஆற்று நீர்: உடன்படிக்கை கையொப்பம்

புது டில்லி. ஏப். 14- கிருஷ்ணா நதியிலிருந்து சென்னை நகருக்கு ஆண்டுக்கு 1500 கோடி கன அடி தண்ணீர் சப்ளை செய்வதற்கான உடன்படிக்கை இன்று கையொப்பம் ஆயிற்று.

1500 கோடி கன அடியில் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஒவ்வொன்றும் சமமாக மூன்றில் ஒரு பகுதியைத் தரும்.

மத்திய விவசாய, நீர்ப்பாசன மந்திரி ஜகஜீவன்ராம் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உடன்படிக்கை கையொப்பமாயிற்று. தமிழ் நாடு கவர்னர் கே. கே. ஷா, மகாராஷ்டிரா நீர்ப்பாசன மந்திரி பி.ஜே. கடால், கர்நாடக நீர்ப்பாசன மந்திரி எஸ். அஸடுபே ஆகியோர் கூட் டத்தில் பங்கு கொண்டு உடன் படிக்கையில் கையொப்பமிட்டார்கள். ஆந்திர மாநில அமைச்சர் வர இயலாததால், அவர் கையொப்பத்துக்காக உடன்படிக்கை ஹைத்ராபாத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த உடன்படிக்கையில் காரணமாக சென்னை மாநகரின் தண்ணீர்ப் பஞ்சம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை குடிநீருக்கான அணைகள் மழைத் தண்ணீரையே எதிர்பார்க்கின்றன. மழை பொய்த்தால் மாநகர மக்கள் தவியாய்த் தவிப்பது உலகம் அறிந்ததே.

Summary

Valluvar Kottam: Inaugurated today by the Rashtrapati.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.