ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சோழபுரம் அருள்மொழிநாத சுவாமி கோயில் தேரோட்டம்

சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாய அருள் மொழிநாத சுவாமி கோயில் ஆனி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On :26 ஜூன் 2018, 6:53 am IST

சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாய அருள் மொழிநாத சுவாமி கோயில் ஆனி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
      சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உள்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோயிலில்  ஆனி மாத உற்சவத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இத் திருவிழா கடந்த ஜூன் 17 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.   தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளிலும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரியாவிடை கோலத்துடன் சுவாமியும், அம்மனும் ரிஷபம், அன்னம், மயில், காமதேனு, கிளி, குதிரை, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி  அருள்பாலித்தனர்.         விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளினர். மாலை 4.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.     முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 5.23 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் மாலை சாற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். இதில், சோழபுரம், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டிஎஸ்கே. மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில், தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளர் மு. வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.