சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் எல்ஐசி அலுவலகத்திலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு காப்பீட்டுக் கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அன்றாட அலுவல், ஆண்டு இறுதி மற்றும் மாத இறுதி கணக்கு முடிப்பு பணிகள் காரணமாக போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இதில், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டி, செயலர் கர்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காப்பீட்டுக் கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

