சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கார் மீது லாரி மோதிய விபத்தில் மர வியாபாரி உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் செழியன் (48). மர வியாபாரியான இவர், கடந்த திங்கள்கிழமை அன்று நண்பர்கள் முருகன் (40), கண்ணன் (44) ஆகியோருடன் வியாபாரம் நிமித்தமாக கோவைக்கு காரில் சென்றார்.
பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு ஊருக்கு திரும்பினர். இவர்களின் கார் திருப்பத்தூர் அருகே வந்தபோது, எதிரில் திருப்பூர் நோக்கி விறகு ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், கார் உருக்குலைந்ததால், செழியன் உள்ளிட்ட 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்புத் துறையினரும், அப்பகுதியிலிருந்தவர்களும், அவர்கள் 3 பேரையும் வெளியே மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செழியன் உயிரிழந்தார்.
கண்ணன், காரை ஓட்டி வந்த முருகன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் தேவகோட்டையைச் சேர்ந்த சத்தியராஜ் (44) கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து காரணமாக திருப்பத்தூர் - திண்டுக்கல் சாலையில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. ராஜசேகர் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

