மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வசந்த பெருவிழா: ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்

திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Updated On :14 மே 2018, 6:57 pm

திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இக் கோயிலில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற வசந்த பெருவிழாவில், கடந்த மே 4 ஆம் தேதி பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், மே 5 ஆம் தேதி இரவு அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டப்பட்டு முதல் நாள் விழாவும் தொடங்கியது. இரண்டாம் நாள் முதல் 8 ஆம் நாள் வரை தினந்தோறும் இரவு அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் நாளில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். ஒன்பதாம் நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பத்தாம் திருநாளான திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் பூமாயி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். கோயில் திருக்குளத்தில் அம்மனுக்கு முதல்முறையாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதையடுத்து நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை வசந்த பெருவிழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.