மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிவகங்கை அருகே நில இடைத்தரகர் மர்மச் சாவு

சிவகங்கை அருகே பூட்டியிருந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் இறந்து கிடந்தார்.

Updated On :14 மே 2018, 6:58 pm

சிவகங்கை அருகே பூட்டியிருந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் இறந்து கிடந்தார்.
சிவகங்கை அருகே ஆக்ஸ்வார்டு நகரைச் சேர்ந்தவர் ராஜா (52). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வெகு நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் போலீஸார் வீட்டைத் திறந்த பார்த்தபோது, உடலில் வெட்டுக் காயங்களுடன் ராஜா இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே, அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். வீட்டில் நகை, பணத்தை திருட முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.