மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

"முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:33 am

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் முன்னாள் படைவீரரின் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்குப் புத்தகம், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓய்வூதிய ஆணை, மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் படை விலகல் சான்றிதழிலுள்ள குடும்ப விவரம் உள்ளிட்டவற்றுடன்  ‌w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு சிவகங்கையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஆர்.வரதராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.