நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பேருந்தில் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகை திருட்டு

மதுரையில் பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்

Updated On :13 பிப்ரவரி 2019, 8:35 am IST

மதுரையில் பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக  செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(43). தேனியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தேனி சென்றார். விசேஷம் முடிந்ததை அடுத்து பேருந்தில் மதுரைக்கு வந்துள்ளார். பாதுகாப்பு கருதி மனைவி அணிந்திருந்த 19 பவுன் நகைகளை பையில் வைத்துள்ளார். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.