காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கம்பராமாயணப் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீகார்த்திகேயன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடல்கள் ஒப்பித்தல் போட்டியும், மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களில் தேவகோட்டை ஸ்ரீ
முருகானந்தம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் ஆ.சதீஷ்குமார் முதலிடமும், காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக். பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவர்
இரா. பிர பாகரன், கோட்டையூர் சி.சி. பெண்கள் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி ஜ.பவதாரிணி, செம்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி டி. சந்தியா ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி எம்.காம்., மாணவர் க. கார்த்திக் முதலிடமும், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி பி.எஸ்சி., மாணவர் ரெ. லெட்சுமி நாராயணன் இரண்டாமிடமும், அழகப்பா கல்வியியல் கல்லூரி மாணவர் வி.யோகேஷ்குமார், சிவகாசி அரசு கலைஅறிவியல் கல்லூரி மாணவர் மை.அப்துல்ஹாதி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.
போட்டிகளை கம்பன் கழக நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் நடத்தினர்.
வெற்றிபெற்றவர்களுக்கு வரும் மார்ச் 19-ஆம் தேதி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெறும் கம்பன் திருவிழா தொடக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







