சிவகங்கை அருகே புதன்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மாடக்கோட்டையைச் சேர்ந்த சுந்தரராஜ் (67), குமார் மனைவி மணிமுத்து (37), சேவுகன் (35), கணேசன் (50), மாணிக்கம் (45), சரண்(15) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கையில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவுக்காக சரக்கு வேனில் புதன்கிழமை சென்றுள்ளனர். திருமண விழா முடிந்த பின்னர் மாடக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர்.
வாகனத்தை சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். சிவகங்கை-மானாமதுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டனி அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுந்தரராஜ், மணிமுத்து உள்பட 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனைவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், படுகாயமடைந்த சுந்தரராஜ், மணிமுத்து ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள சேவுகன், கணேசன் உள்ளிட்ட 23 பேர் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு!

முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை!

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
