தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சூராணம் அருகே கானங்காத்தான்கோட்டையைச் சேர்ந்தவர் மீனாட்சி (57). இவர் செவ்வாய்க்கிழமை தனது அக்காள் கணவர் மலைக்கண்ணன்(60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டை அருகே இருமதியில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது விளாங்காட்டூர் அருகே சென்றபோது மீனாட்சி மயக்கம் அடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









