சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் திங்கள்கிழமை இரவு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் மூலவர் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் எழுந்தருளினார். பின்னர், சுவாமிக்கு ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. திரளானோர் தைப்பூச விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர். மேலும், மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு: உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க... ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டி டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?






