இளையான்குடி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
நகரகுடி, ஆழிமதுரை, வாணி, பெரும்பச்சேரி, கீழாய்குடி, இளமனூர் ஆகிய கிராமங்களில் நடந்த கிராம சபைக் கூட்டங்களுக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுப.மதியரசன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர்கள் மலைச்சாமி, சிவனேசன், துரைமுருகன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைமைக் கழக பிரதிநிதி கான்ஸ்டன்டைன் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலர் சேங்கைமாறன் ஆகியோர் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டு கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினர். இக்கூட்டங்களில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் மலைமேகு, அய்யாச்சாமி, வெங்கட்ராமன், காளிமுத்து, அன்பரசன், சாருஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்
நீட் மறுதேர்வு: மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்!






