சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் மண்டல மேலாளரைக் கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை- திருப்பத்தூர் சாலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டல மேலாளர் கடந்த சில வாரங்களாக அலுவலகப் பணிகளை சரிவர கவனிக்காததால் பல்வேறு கோப்புகள் தேக்கமடைந்துடன் சுமை தூக்குவோருக்கு ஊதியம் வழங்கப்பட வில்லையாம். மேலும் அவர், அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சுமார் 60 பேர் புதன்கிழமை அலுவலக வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை வட்டாட்சியர் ராஜா தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மண்டல மேலாளரை பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என அலுவலர்கள் தெரிவித்து, மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களும், சுமை தூக்குவோரும் பணிக்கு செல்லவில்லை. எனவே அந்தந்த பகுதியில் உள்ள பண்டகசாலை முழுவதும் புதன்கிழமை செயல்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


