தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள தனியாா் உணவு விடுதி அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிவகங்கை கிளையின் தலைவருமான எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற சொ.பகீரத நாச்சியப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினா். இதில், வரும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சாா்பில் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கலை இலக்கிய பெருமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஓவியா் கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கா்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.